Monday, June 13, 2005

நுழைவுத் தேர்வு பிரச்னை

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்சய

-*-

ஸஞ்சயா, இந்த நுழைவுத் தேர்வு பிரச்னை என்ன ஆகும், எங்கு போய் முடியும் என்று உன் ஞானதிருஷ்டியால் கண்டுணர்ந்து சொல்லக் கூடாதா என்றான் கோயிஞ்சாமி.

"ரெண்டு கிளாஸ் சூடா டீ போடுங்க நாயர்" என்று ஆர்டர் கொடுத்தபடி டீக்கடை வாசல் பெஞ்சில் அமர்ந்திருந்த ஸஞ்சயன் தொண்டையைக் கனைத்து சரி செய்துகொண்டான்.

"எதுக்கெடுத்தாலும் கோர்ட்டுக்குப் போறது இப்ப வழக்கமாப் போயிடுச்சு. ஆனா கவர்மெண்டு இப்படி நுழைவுத்தேர்வை வச்சிட்டு அதைத் திடீர்னு கேன்சல் செஞ்சா தப்பு, அதனால பல மாணவர்கள் மோசமான முறைல பாதிக்கப்பட்டிருக்காங்கன்னுதான் கோர்ட்டு தீர்ப்பு சொல்லும்னு என்னோட ஞானதிருஷ்டில தெரியுது."

"அடப்பாவமே! அப்ப இந்த வருஷம் அட்மிஷன் முடிய மாசக்கணக்காகுமோ?"

"ஆமா! வெறும் அரசியல் காரணங்களுக்காக இப்படி இஷ்டத்துக்கு முடிவெடுத்தா நாட்டு மக்கள் எல்லோருக்கும்தான் கஷ்டம்!"

"சரி, நுழைவுத் தேர்வு வேணுமா? இல்லை ஒழிச்சுடலாமா?"

"எக்கச்சக்கமா நுழைவுத்தேர்வுகள் இருக்கறது சரியில்லை. அமெரிக்கா மாதிரி ஒரு GRE, ஒரு SAT. அதுல என்ன ஸ்கோர் வருதோ அதை வச்சி எல்லா காலேஜ்லயும் சேரலாம். ஒவ்வொரு காலேஜும் இந்த ஸ்கோரையும், வேற சில க்ரைட்டீரியாவையும் வெச்சுகிட்டு அட்மிஷனை கவனிக்கலாம்."

"ஆமா, நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. ஆனா இந்தத்தேர்வை யார் நடத்துறது?"

"ஏதோ ஒரு இண்டிபெண்டண்ட் இன்ஸ்டிடூஷன். அது ஏ.ஐ.சி.டி.ஈ + ஏ.ஐ.ஐ.எம்.எஸ் + யு.ஜி.சி சேர்ந்து கூடச் செய்யலாம்."

"நடக்குமா?"

"ம்ஹ்ம்ம்ம். இப்பொழுதைக்கு இல்லை. இன்னமும் பத்து வருஷம் ஆகும்னு ஞானதிருஷ்டில தெரியுது!"

1 Comments:

At June 14, 2005 11:55 AM, Blogger Goinchami_senior said...

இது அதர்மக்ஷேத்ரே. இப்படித்தான் நடக்கும்.

இந்த் நுழைவுத்தேர்வு, டிக் அடிக்கற பரீட்சை ஆகியவற்றால் மாணவர்களின் புத்திசாலித்தனத்தை மதிப்பிடமுடியுமா? நமது கல்விமுறையே படு பயங்கர அபத்தமாகத் தெரிகிறது.

எனக்கென்னவோ பழைய குருகுல பாணிக் கல்விதான் ஒசத்தி என்று இப்போதும் தோன்றுகிறது.

ஏற்கெனவே பொறியியல் சீட்டுகளுக்கு மாணவர்களின் வருகை பெரிதும் குறைந்துவரும் நிலையில் இவர்கள் அடிக்கும் கூத்தில், பொறியியல் படிக்க விரும்புபவர்கள் அனைவரும் இனி யோசிக்காமல் அமெரிக்க விசாவுக்குத்தான் முதலில் அப்ளை செய்வார்கள் என்று நினைக்கிறேன். அப்புறம் அண்ணா பல்கலையில் அப்பளம் இடும் கலைதான் கற்றுத்தர வேண்டியிருக்கும்.

 

Post a Comment

<< Home