Thursday, June 16, 2005

முட்டைப் பைத்திய மின்னஞ்சல்

புரோலாக்கு
---------------
"ராம் வீட்டு சேவல் க்ருஷ்ணன் வீட்டில் முட்டைப் போட்டால் அந்த முட்டை யாருக்கு சொந்தம்?"
"சேவல் ராமோடது. அதனால முட்டையும் ராமுக்குதான் சொந்தம். இதுல என்ன சந்தேகம்?"
"போய்யா கோயிந்சாமி. சேவல் போய் எங்கயாவது முட்டை போடுமா?"

நடுலாக்கு
-------------
ஒரு ஊரில் 18 பைத்தியங்கள் வசித்து வந்தன. அவைகளில் அவையுள் தலைமைப் பொறுப்பில் இருந்த பைத்தியம் நோய்வாய்ப்பட்டு இறந்துவடவே, அவைகளுள் அவையுள் யார் தலைவர்ப் பதவி வகிப்பது என்பதில் போட்டாபோட்டி எழுந்தது. அடிதடியில் வளர்ந்து ஒவ்வொரு பைத்தியமும் தான்தான் தலைவனாகத் தகுதியுடையவன் என்று சண்டையிட்டன.

இது பற்றி அறிந்த ஒரு முனிவர் அத்தனை பைத்தியங்களையும் தன் ஆசிரமத்திற்கு வரவழைத்தார். பிறகு தான் ஒரு கேள்வி கேட்கப்போவதாகவும் அதற்கு சரியான பதில் சொல்லும் பைத்தியமே தலைமைப் பைத்தியம் வகிக்கலாம் என்றும் யோசனை சொன்னார். முனிவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக இதர பைத்தியங்களும் ஒத்துக்கொண்டன.

முனிவர் கேட்ட கேள்வி இதுதான்:
"ஒரு தராசின் ஒரு பக்கத்தில் பத்து கிலோ இரும்பும் இன்னொரு பக்கத்தில் பத்து கிலோ பஞ்சும் இருந்தால், இரும்பின் எடை அதிகம் இருக்குமா அல்லது பஞ்சின் எடை அதிகம் இருக்குமா?"

எப்பிலாக்கு
---------------
முனிவரின் கேள்விக்கு சரியான விடை தெரிந்தவர்கள் இங்குள்ள பின்னூட்டம் வழியாகவோ அல்லது goinchaami@gmail.com என்ற முகவரிக்கோ தங்கள் விடையை அனுப்பி வைக்கலாம்.

7 Comments:

At June 16, 2005 5:55 PM, Anonymous Anonymous said...

தராசோட எடை எம்புட்டுன்னு முதல்ல சொல்லுங்க சாமியோவ். அப்பத்தான், பித்தாகோரஸ் தேரத்தை யூசு பண்ணி விடை கண்டுபிடிக்க முடியுமுங்கோ!

 
At June 16, 2005 6:01 PM, Blogger கோயிஞ்சாமி3 said...

தராசோட எடை இந்தப்பக்கம் 3 கிலோ, அந்தப்பக்கம் 3 கிலோவாம்.

 
At June 23, 2005 12:25 PM, Anonymous Anonymous said...

ஏனுங்க,

"அவைகளில்"ங்கறதை அடிச்சிட்ட மாதிரி "அவையுள்"ங்கறதையும் அடிச்சிட்டு "அவற்றுள்"ன்னு போடுங்க.

மற்றபடி இதுக்கான சரியான விடைய தலைவர் ஆக தகுதியுள்ள பைத்தியத்து கிட்ட கேட்டா சொல்லீடுமுங்க..

 
At June 23, 2005 6:42 PM, Anonymous Anonymous said...

சேவல் என் முட்டை போடாது? கோழியின் முட்டை சேவலுக்குத்தானே சொந்தம்.
-பென்ச் கோவிந்த்

 
At June 24, 2005 2:39 AM, Anonymous Anonymous said...

ஒவ்வொரு பதிவையும் யார் எழுதியிருப்பாங்கன்னு (யோசிச்சா) நல்லா பொழுது போகுது. என்னா செல பதிவு மெகா சீரியல் கணக்கா பெரிசா இருக்கதால கொஞ்சம் போர் அடிக்குது. ஆனாலும் நல்ல டைம் பாஸ்.

கம்-சென்டிமீட்டர்-டிட் ன்ட் சா-யூ (சீக்கிரமே முத்திடும்)

 
At June 26, 2005 5:03 PM, Blogger Sivaraj said...

இப்பிடி வாயால பஞ்சு இரும்புனு சொல்லிட்டு இருந்தா எப்படிங்க தெரியும். தராசுல பஞ்சயும் இரும்பயும் வெச்சி நிறுத்து பாத்தாத் தானுங்களே தெரியும்.

 
At July 03, 2005 11:58 PM, Blogger லதா said...

முன்சாமி 1 : இரண்டும் ஒரே அளவாகத்தான் இருக்கும்.

முன்சாமி 2 : அப்படி என்றால் நீ என் தலைமேல் 10 கிலோ பஞ்சினைப் போடு, நான் உன் தலைமேல் 10 கிலோ இரும்பைப் போடுகிறேன். :-))

முன்சாமி 1 ::-(((((

 

Post a Comment

<< Home