16-06-1981 தேதியிட்ட குமுதத்தில், நடிகை சரிதா எழுதிய தொடரின் மூன்றாவது அத்தியாயத்தில் இருந்து சில பகுதிகள் ரஜினியை நான் ·பர்ஸ்ட் சந்திச்சது ' தப்புத்தாளங்கள்' ஷ¥ட்டிங்கிலே. பெங்களூரில் அவுட்டோர் படபிடிப்பு. ஒரு பாட்டு எடுக்கிறாங்க. அவரை மத்தவங்க எல்லாம் 'விஷ்' பண்ணினாங்க. என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினாங்க நாள் பூர்ரா வேலை. கல்யாணம் ஆன பிறகு நான் பாடற மாதிரிப் பாட்டு. " அழகான இளமங்கை கட்டில் கொடுத்தாள்" என்று ஆரம்பிக்கும். நான் பிரெக்னன்ட்டா இருக்கிற மாதிரி காரெக்டர். அந்த காரெக்டர் அறிவு முதிர்ச்சி பெற்ற காரெக்டர் இல்லையா? டைரக்டர் ஒவ்வொரு ஷாட்டுக்கும், " மரோசரித்ரா மாதிரி பண்ணாதே! அதை மறந்துடு! யூ ஆர் நான் ஸிக்ஸ்டீன்! இப்ப இருபத்து அஞ்சு வயசு. இந்தப் பெண் காரெக்டருக்கு ஆக்சுவலா முப்பது வயசு இருக்கணும், உனக்காக அஞ்சு வயசு குறைச்சிருக்கேன், " என்று அடிக்கடி ஞாபகப் படுத்திகிட்டே இருப்பார்.
ஷ¥ட்டிங் முடிஞ்சவுடன் ஓட்டலுக்கு வந்தோம். நான் அப்போ போர்ட்டிகோவிலே உலாத்திகிட்டு இருந்தேன். காஷ¤வல் டிரெஸ்ஸிலே, ஒரு மாக்ஸி போட்டுகிட்டு இருந்தேன். ரஜினி அங்கே வந்தார். காலையிலே பார்த்ததற்கும், ஈவினிங்லே பார்த்ததற்கும் நல்ல வித்தியாசம். என்னை யாரோன்னு நினைச்சுட்டார். ' குட் ஈவினிங் ஸார்' ன்னேன். அவரும் வணக்கம்னார். என்னை அடையாளம் தெரிஞ்சுக்கலை. நான் ரொம்ப குண்டு வேற. அதுவும் ஸெவன்டீன் தான் அப்போ. படப்பிடிப்பின் போது நல்லா கெட் அப் கொடுத்து , மேக் அப் போட்டிருந்ததால், முப்பது வயது பொம்பிளை மாதிரி ஆகியிருந்தேன். என்னை யாருன்னு தெரிஞ்சுகிட்டதும் ரொம்ப ஆச்சர்யம் - 'ஐயய்யோ! உனக்குப் போயா வணக்கம் போட்டேன் ரொம்ப மரியாதையா' அப்படீன்னு கிண்டல் பண்ணார். ' ஒரு வணக்கம் வேஸ்ட் ஆயிப் போச்சே என் லை·ப்லே' ன்னார்.
தப்புத்தாளங்கள்லே அந்த பிரெக்னன்ட் எ·பெக்ட் வர்றதுக்காக துணியெல்லாம் பெரிசா வெச்சுக் கட்டி பெரிய வயிறு மாதிரி பண்ணி- எனக்கு ரொம்ப தமாஷாக இருக்கும்.
"இந்த மாதிரி காட்டினால் தான் கொஞ்சம் ஏஜ்டா தெரியும். முழு பிக்சருக்கும் இப்படியே கட்டிக்குங்க," ன்னு அங்கே இருந்தவங்க சொல்லுவாங்க. " பிக்சர் முடியறவரைக்கும் டெலிவரி ஆகாமலா இருப்பேன்" ன்னு சொல்லுவேன்.
தப்புத்தாளங்கள் இரண்டு மொழியிலே எடுத்தாங்க. கன்னடம், தமிழ். எனக்கு கன்னடத்திலே ஒரு வார்த்தை தெரியாது. சாக்கு பேக்கு தவிர ஒரு வார்த்தை தெரியாது. ரஜினிதான் அந்த யூனிட்டிலேயே நல்லா கன்னடம் பேசுவார். ரஜினியும் காமரா மேன் லோகநாதனும்தான் எனக்குச் சொல்லிக் கொடுப்பாங்க. நான் இஷ்டத்துக்குப் பேசுவேன். என்னன்னவோ டிக்ஷனரியில் இல்லாத வார்த்தை , உச்சரிப்பு எல்லாம் வரும். தப்புத் தப்பா கெட்ட வார்த்தைகள் வரும். கன்னடத்திலே ஏதாவது வார்த்தை கொஞ்சம் மிஸ்ஸானால் கெட்ட வார்த்தை ஆயிடுமாம்.
இப்போ பரவாயில்லை. கன்னடம் கொஞ்சம் பிக் அப் பண்ணியிருக்கேன். நல்லாவே பேசுவேன். இப்போ இரண்டு கன்னடப் படம் பண்றேன். ராஜ்குமாருடன் ஒண்ணு. அனந்தநாகுடன் ஒண்ணு. இரண்டிலும் நானே பேசறேன்.
பாலசந்தர் யூனிட்டிலே என்னை எல்லாரும் சிஷி சிஷின்னுதான் கூப்பிடுவாங்க. சின்னக் குழந்தைன்னு அர்த்தமாம். ரஜினியும் அப்படித்தான் கூப்பிட ஆரம்பிச்சாரு முதலிலே. அப்புறம் தான் கறுப்பி, கறுப்பின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டார்.
ரஜினி அப்போவெல்லாம் ஜாஸ்தி பேசமாட்டார். அடிக்கடி தூங்குவார். சரியான தூங்குமூஞ்சின்னு நான் நினைக்கிறேன். வீணாக் கான்டிரவர்ஸி ஏன்னு அவாய்ட் பண்றதுக்குத்தான் அப்படி ரெஸ்ட் எடுத்துக்குவார் போலிருக்கு. அதல்லாம் எனக்கு என்ன தெரியும்? பழகறதுக்கு நல்ல நண்பர் அவர்.
30-07-1981 தேதியிட்ட குமுதத்தில், நடிகை சரிதா எழுதிய தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் இருந்து சில பகுதிகள் தப்புத்தாளங்களுக்கு அப்புறம் ரஜினியை நான் அப்பப்போ மீட் பண்ணிட்டிருந்தாலும், கூடச் சேர்ந்து ஒர்க் பண்ணது 1981' லேதான்.
பாலசந்தரோட 'நெற்றிக் கண்' படத்திலே ரஜினியோடு சேர்ந்து செய்தேன். நஜினிக்கு கல்யாணம் நடக்கறதுக்கு ஒருவாரம் முன்னாடியிலிருந்து அவர் கூடத்தான் ஒர்க் பண்ணிட்டிருந்தேன். கல்யாணத்தைப் பற்றி ஒருவார்த்தை கூடச் சொல்லவேயில்லை. யாருக்கும் இன்விடேஷன் கொடுக்கலே. இன்வைட் பண்ணலை. பிப்ரவரி 26' ஆம் தேதி கல்யாணத்தை விடியல் காலையிலே திருப்பதியிலே முடிச்சுட்டு , பத்து மணிக்கு ஸ்ட்ரெயிட்டா ஏவி.எம்.க்கு ஷ¥ட்டிங்கிற்கு வந்து விட்டார். அவருக்கு கல்யாணம்னு எல்லாரும் அப்ப பேசிட்டாங்க. எனக்கு உண்மையான்னு தெரியலை. பேப்பர்லே ஏதாவது போட்டிருப்பாங்க, கேட்டால் இல்லைன்னு சொல்லுவார் என்று நினைச்சேன். பயமாயிருந்தது அவரைக் கங்கிராஜுலேட் பண்றதுக்கு.
அப்பிறம் எல்லரும் சொன்ன பிறகுதான் கங்கிராஜுலேஷன்ஸ் சொன்னேன். காட்பரீஸ் சாக்லேட் கொடுத்தார். அப்புறம் தான் நிஜமா நம்பினேன். காட்பரீஸ் எல்லாருக்கும் கொடுக்கவில்லை. " ஒன்லி ·பார் லேடீஸ்", என்றார். லட்சுமிக்கு, விஜயசாந்திக்கு, எனக்கு எல்லா லேடீஸ்களுக்கு மட்டும் கொடுத்தார். நாங்க லேடீஸ் எல்லாம் வெளியிலே உட்கார்ந்திருந்தோம். உள்ளே டைரக்டர், டெக்னீஷியன்களுக்கு எல்லாம் கொடுத்திருப்பார். சும்மாச் சொல்றார், லேடீசுக்கு மட்டும் என்று.
மகாபலிபுரத்தில் ஷ¥ட்டிங் நடந்திட்டிருந்த போது, ரஜினியும் , அவர் மனைவி லதாவும் வந்திருந்தாங்க. நான் ஒரு தெலுங்குப் படத்துக்காகப் போயிருந்தேன். ஹாலிடேக்காக அவங்க வந்திருந்தாங்க. ரஜினி, லதாவை அறிமுகம் பண்ணினார். ரொம்ப நல்லவங்க. அதிகம் பேச மாட்டாங்க. ரொம்ப ஸா·ப்ட்.
06.10.96 தேதியிட்ட ஆனந்த விகடனில், சுல்தான் மொய்தீன் ( பிரபல chef) எழுதிய கட்டுரைத் தொடரின் , எட்டாவது அத்தியாயத்தின் மறுபிரசுரம். ( நன்றி, ஆனந்த விகடன்) பொதுவாக வி.ஐ.பிக்கள் வருகிறார்கள் என்றால் பல மணி முன்பே தொலைபேசியில் தகவல் வந்துவிடும். குறிப்பிட்ட டேபிளை ரிசர்வ் செய்துவிடுவோம். இன்னும் பல வி.ஐ.பிக்களின் உதவியாளர்கள், " ஐயாவோடு இத்தனை பேர் வருகிறார்கள், அவர்களுக்கு இன்ன இன்ன உணவுகளை ரெடி செய்து வையுங்கள்" என்று மெனுவைக் கூட முன்கூட்டியே சொல்லிவிடுவது வழக்கம்.
ரஜினி மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்றுதான் வருவார். எந்த டேபிள் காலியாக இருக்கிறதோ அதில் போய் உட்கார்ந்துவிடுவார். இன்று என்ன சாப்பிடலாம் என்பதிலும் அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்.
சதை போடும் அயிட்டங்கள் மட்டும் வேண்டாம். மத்தபடி எந்த அயிட்டம் இன்னிக்கு நல்லா இருக்குன்னு நெனைக்கறீங்களோ, அதை எடுத்து வாங்க" என்று சாய்ஸைக் கூட எங்களுக்கே விட்டு விடுவார்!. ரஜினிக்கு என்ன என்ன அயிட்டங்கள் பிடிக்கும் என்பது எங்கள் அனைவருக்கும் அத்துபடி. அவருக்கு ஆட்டுத்தலைக்கறி என்றால் உயிர். அதே போல பாயா-இடியாப்பம். வெளிநாட்டு உணவு வகையில் அவரைச் சப்பு கொட்ட வைக்கும் அயிட்டம் " ஷீஸ்வான்"
இந்திய உணவு வகைகளில் குஜராத்தி, பெங்காலி, சவுத் இண்டியன் என்று மாநிலவாரியாக இருக்கிறதே அதே போல இது சீனாவின் ஒரு வகை உணவு வகை.
ரஜினி. " ஐயோ! வேணாம்பா" என்று தவிர்க்கும் அயிட்டங்கள் - ஸ்வீட் , ஐஸ்க்ரீம். ரஜினியின் மகள்கள் இருவருக்கும் ஐஸ்க்ரீம் தான் ·பேவரைட்.
சில விஐபிக்கள் சாப்பிட வந்தால், ஆர்டர் எடுக்கும் நேரத்தில் இருந்து அவர்கள் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் வரை, ஒரு வெயிட்டர், அவர்கள் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டும் என்பது நட்சத்திர ஓட்டல் மரபு. ரஜினி அதை எதிர்பார்ப்பது கிடையாது.
உணவு சர்வ் செய்யப்பட்ட உடன், " நீங்க ஏன் சும்மா நிக்கறீங்க? போய் மத்தவங்களைக் கவனிங்க" என்று வெயிட்டரை அனுப்பி விடுவார். ரஜினி, ஓட்டலுக்கு வருவது பெரும்பாலும் ஒன்பது மணிக்கு மேல்தான். தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தான் வருவாரே தவிர, தனியாக ஒரு நாளும் வரமாட்டார். இரவு பத்து பத்தரை மணிக்கு மேல் என்றால், அவர் மனைவி லதா மட்டும் உடன் வருவார்.
எங்கள் ஐ.டி.சியின் இன்னொரு ஓட்டலான சோழா ஷெராட்டன், ரஜினி வசிக்கும் போயஸ் கார்டனுக்குப் பக்கம். வாரத்துக்கு ஒருமுறையாவது அங்கேயும் வருவார்.
அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சி -
இரவு 11.45. ரெஸ்டாரண்ட்டை மூடும் நேரம். கஸ்டமர்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டார்கள். சரி, நாமும் சாப்பிட்டுக் கிளம்ப வேண்டியதுதான் என்று ஓட்டலின் ஊழியர்கள் சாப்பிட ஆரம்பித்த நேரம்.
நுழைந்தார் ரஜினி.
ஊழியர்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார்கள். " நோ நோ.. நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். நான் வெயிட் பண்றேன்.." என்று சொன்னது மட்டுமல்ல. பக்கத்தில் இருந்த அயிட்டங்களை எடுத்து ஜாலியாக ஏதோ பேசிய படி பரிமாற ஆரம்பித்துவிட்டார். சரிதான்.. கெஸ்ட் நமக்குப் பரிமாறுவதா என்று ஊழியர்கள் டென்ஷனாகித் தடுக்க முயல... " நோ ப்ராப்ளம், நீங்கள் எத்தனை முறை எனக்கு சர்வ் செய்திருக்கிறீர்கள்.. இன்று ஒருநாள் உங்களுக்கு சர்வ் செய்தால் தப்பென்ன ? என்று அவர்களைக் கட்டாயப்படுத்தி உட்கார வைத்து 'சர்வ்' செய்துவிட்டு பிறகுதான் அவர் சாப்பிட்டார்.
ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், " ஓட்டல் ஊழியர்களுக்குத் தனியாக அதே சமயம் எளிமையான முறையில் தயாரிக்கப் படும் 'staff curry' -ஐ அவர் உரிமையோடு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். அந்தச் சுவை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கள் ஓட்டலில் பணிபுரியும் வெயிட்டர்கள், சூப்பர்வைசர்கள், காப்டன்கள் மட்டும் அல்ல... சமையல் அறையில் பணி புரியும் சமையல்காரர்களைக் கூட அவர் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்.
ஒருமுறை சோஷா ஷெராட்டனில் இருக்கும் பெஷாவர் ரெஸ்டாரண்ட்டில் மனைவி - மகள்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான்கு டேபிள் தள்ளி மணிரத்னமும், சுகாசினியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரஜினிக்குப் பக்கத்து டேபிளில் கல்லூரி மாணவர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். " ஹேப்பி பர்த்டே டு யூ" என்று சுற்றியிருந்து பாட்டு கிளம்பியது. ஒரு மாணவர் மகிழ்ச்சி பொங்க , பிறந்த நாள் கேக் வெட்ட , ரஜினி, யாரும் அழைக்காமல் தானாகவே எழுந்து சென்று ' பர்த்டே பாய்க்கு' வாழ்த்துச் சொன்னார். அது மட்டும் அல்ல, மாணவர்கள் சாப்பிட்டுக் காத்திருந்தும் டேபிளுக்கு பில் வரவில்லை. வெயிட்டரிடம் கேட்டார்கள். " உங்கள் பர்த்டே பார்ட்டிக்கான பணத்தை ஏற்கனவே ரஜினி செலுத்தி விட்டார்" என்று விளக்கினார்கள்.