Tuesday, May 22, 2007

ரிலயன்ஸ் ஃப்ரஷ்

குடும்பத்துடன் வாக்கிங்க்கும் ஷாப்பிங்கும் செய்யும் வழக்கம் கோயிஞ்சாமிக்கு எப்போதுமே உண்டு. பொட்டிக்கடையில் கவர்னர் பீடி வாங்குவதைத் தவிர மிச்சம் எல்லாவற்றுக்கும் கவர்னருடனும் மனைவி யுடனும் மக்களுடனும்தான் போவான்.

பிறந்ததுமுதல் இதுவரை புத்திசாலித்தனமாக எதையாவது சாதித்தோம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக கோயிந்சாமிக்கு பட்டியலில் ஒன்றும் இல்லை. அதிகபட்சமாக ஆறு அட்டம்ப்ட் எடுத்தாவது கல்லூரியில் பாஸ் பண்ணிய புள்ளியியலைச் சொல்லலாம். மற்றபடி எல்லாம் மனைவி, மக்கள், மாமியார், அம்மா சரிசமவிகிதமாக கோயிந்துவின் வாழ்க்கையில் நடந்த எல்லா நன்மைகளுக்கும் உரிமை கொண்டாடத் தகுதியானவர்களாயிருக்கின்றனர்.

எப்படியோ பாவப்பட்டு பிழைப்பை நடத்தும் கோயிந்துவுக்கு எப்படியாவது புத்திசாலிப்பட்டம் வாங்க ஆசை இருக்காதா என்ன? அப்படி ஒரு வாய்ப்பும் வந்தது. ரிலையன்ஸ் ஃப்ரஷ் தன் வீட்டுக்கு மிக அருகில் திறந்திருப்பதாக அறிந்தான் கோயிந்சாமி . ஏதோ அமெரிக்காவில் எல்லாம் இது போன்ற கடைகள் மிகவும் ப்ரபலம் என்று கேள்விப்பட்டான். இங்கே போனால், பாதி அமெரிக்காவையே சுற்றிப்பார்த்த மாதிரி இருக்குமோ? எப்படியும் ஏதாவது புத்திசாலியாக எதையாவது வாங்கி புத்திசாலிப் பட்டம் பெற வேண்டும். உடனடியாக யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து அப்படியாகப்பட்ட ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷுக்குக் கிளம்பினான். கூடவே அக்மார்க் முத்திரை பதித்த ஒரிஜினல் சனீஸ்வரன் ப்ராண்ட் அசட்டுத்தனமும் கோயிந்துவைப் பின்தொடர்ந்தது....


தொடரும்...

1 Comments:

At April 14, 2010 8:57 PM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

Post a Comment

<< Home