Friday, July 29, 2005

ஊத்திக்கினு கடிப்பதும், கடிச்சுக்கினு ஊத்திப்பதும்

கோயிஞ்சாமிக்கு ஒரு ப்ராஜக்ட் பண்ணிக்கொண்டு இருந்தான். அந்த ப்ராஜக்ட் ஒரு இணையதள கட்டுமானத்துக்கானது. அந்த ப்ராஜக்ட்டில் பயனருக்குக் காண்பிக்க ஒரு நாட்காட்டி தேவைப்பட்டது.

அந்த காலண்டரை ஜாவாஸ்க்ரிப்டில் எழுத கோயிஞ்சாமி சபதம் பூண்டான். மறு நாள் முழுதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்பிட்டுவிடும் விபரீதம் அப்பொழுது கோயிஞ்சாமிக்குக் கிஞ்சித்தும் தெரிந்து இருக்கவில்லை.

காலண்டர் ப்ரோக்ராம் ஒன்று எழுத ஆரம்பிக்கும் முன், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் code/scriptகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் முடிவு செய்திருந்தான். மறு நாள் முழுதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்ப்... சரி சரி. பில்ட்-அப் போதும். மேட்டருக்குப் போவோம்.

ஒரு காலண்டரில் என்னென்ன மாதங்கள் இருக்கிறது என்று தெரியவேண்டும். சுலபம், ஒன்று முதல் பன்னிரண்டு வரை உள்ள எண்கள். அடுத்ததாக ஒரு மாதத்தில் என்னென தேதிகள் உள்ளன என்று தெரியவேண்டும், சில மாதம் 28ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும், சில மாதம் 29, சிலவற்றில் 30, 31 இப்படி.

ஆக, அந்த மாதத்தில் எத்தனைத் தேதிகள் உள்ளன என்று கண்டுபிடித்து விட்டால் மற்றவை சுலபம். அதாவது கடைசித் தேதியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஜாவாஸ்க்ரிப்டில் ஒரு மாதத்தின் கடைசித்தேதியைக் கண்டுபிடிக்க உள்ளமைந்த ஃபங்க்ஷன் எதுவும் இல்லை என்பது கோயிஞ்சாமிக்கு உறைக்கவில்லை. எனவே நோட்பேட் திறந்து எழுத ஆரம்பித்தான். மறு நாள் முழுவதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்பிட்டுவிடும் விபரீதம் அப்பொழுத்... சரி, சரி, சரி. சஸ்பென்ஸ் கதை எழுத ஆசைப்பட்டதில் இருந்து இப்படித்தான் சம்பந்தமில்லாத இடத்தில் பஞ்ச் லைன் வந்து விழுந்துத் தொலைக்கிறது.

எனவே ஒரு மாதத்தின் கடைசி தேதியைக் கண்டுபிடிக்க கீழ்க்காணும் உத்தியைப் பின்பற்றினான்.


ஊத்திக்கினு கடிச்சுக்கறான்
----------------------

இருக்கும் தேதியுடன் ஒரு மாதம் கூட்டினால் அடுத்த மாதம் வந்து விடும். அடுத்த மாதம் வந்தவுடன் அந்த மாதத்தின் ஒன்றாம் தேதிக்கு தேதியை மாற்ற வேண்டும். பிறகு அதில் இருந்து ஒரு தேதி கழித்துவிட்டால், தற்போதைய மாதத்தின் கடைசித்தேதி கிடைத்து விடும்.

உ.தா.:

இன்றைய தேதி: 29 ஜூலை 2005
ஒரு மாதம் கூட்டினால்: 29 ஆகஸ்ட் 2005
இம்மாதத்தின் முதல் தேதி: 1 ஆகஸ்ட் 2005
இதிலிருந்து ஒரு நாள் கழித்தால்: 31 ஜூலை 2005

ஆக, ஜூலை மாதத்தின் கடைசி நாள் 31.

ஆஹா, ப்ரமாதம் ப்ரமாதம் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு அந்தந்த கிழமைகளில் சரியாக வருமாறு காலண்டரை உருவாக்கி வீட்டிற்கும் போய்விட்டான் பணியகத்தில் இருந்து.

கடிச்சுக்கினு ஊத்திக்கறான்
-----------------------
மறுநாள் பணியகம் வந்ததும் தான் நேற்று எழுதிய நிரலை ஒரு மேற்பார்வை பார்க்க ஆரம்பித்தான். அடடே, என்ன அதிசயம்! நேற்று மிகவும் துள்ளியமாக இயங்கிய நிரல் இன்று தப்புத்தப்பாக காட்டுகிறதே தேதிகளை!

கணிப்பொறியில் தேதியைப் பார்த்தான். 31 மார்ச் 2005 என்று காண்பித்தது (வேண்டுமென்றே மாற்றி அமைத்திருந்தான் கோயிஞ்சாமி).

ஒன்றும் பிடிபடவில்லை. பணியகத்தில் இருந்த ஃப்ரிட்ஜில் இருந்து மூன்று பாட்டில் தண்ணீரை மதியத்திற்குள் காலி செய்தும் பலனில்லை. மதியம் உணவு முடிந்ததும் நெல்லைப் பழரசம் குடித்துவிட்டு வந்தும் ஒரு பலனும் இல்லை.

பிறகு மாலை தேநீர் அருந்தியவுடன் 'பொறுத்தது போதும்!' என்று வலைப்பூக்களை மேய்ந்தான். குழுக்களில் வந்த மடல்களைப் படித்துப் பார்த்தான்.

சரி, இதை விடுவதில்லை என்ற தீர்மானத்துடன் மீண்டும் நோட்பேடை எடுத்து அந்த ஸ்க்ரிப்ட்டை ஆராய்ந்தான்.

என்னதான் நடக்கிறது என்று வரிவரியாக டீ-பக் போட்டு மீண்டும் ஆராய்ந்ததில்....

ஒரு உண்மை புலப்பட்டது.

இன்றைய தேதி: 31 மார்ச் 2005
ஒரு மாதம் கூட்டினால்: 1 மே 2005
இம்மாதத்தின் முதல் தேதி: 1 மே 2005
இதிலிருந்து ஒரு நாள் கழித்தால்: 30 ஏப்ரல் 2005

ஆக, மார்ச் மாதத்தின் கடைசி நாள் 30

:-(( :-(( :-((

ஆஹா.... இதான் மேட்டர்.

மார்ச் முப்பத்தொன்றுடன் ஒரு மாதம் கூட்டினால் சாதாரணமாக 31 ஏப்ரல் என்று வரும். ஆனால் புத்திசாலி ஜாவாஸ்க்ரிப்ட், ஏப்ரல் மாதத்தில் 30 தேதி வரைதான் என்று உணர்ந்து, மிச்சமிருக்கும் ஒரு நாளையும் கூட்டி விடுகிறது. எனவே, மே மாதம் ஒன்னாம் தேதி (மேஜர் ஆனேனே!)

இந்த ப்ரச்சனை தீரவேண்டுமென்றால், "இன்றைய தேதி" என்னவாக இருந்தாலும், அதை ஒன்றாம் தேதியாக மாற்ற வேண்டும். அடுத்த மாதம் சென்றவுடன் ஒன்றாம் தேதியாக மாற்றக்கூடாது. இப்படி எழுதினால் எல்லாம் ஓக்கே.

இன்றைய தேதி: 31 மார்ச் 2005
இம்மாதத்தின் முதல் தேதி: 1 மார்ச் 2005 (மொதல்ல கட்ச்கபா)
ஒரு மாதம் கூட்டினால்: 1 ஏப்ரல் 2005 (இப்ப ஊத்திக்கபா)
இதிலிருந்து ஒரு நாள் கழித்தால்: 31 மார்ச் 2005

கோயிஞ்சாமி நிம்மதியாக நோட்பேடை மூடிவைத்தான். இந்த நாள் முழுதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்பிட்டுவிட்ட விபரீதம் இப்பொழுது கோயிஞ்சாமிக்குக் நன்றாகத் தெரிந்தது.

ஆனால் ஊத்திக்னு கடிச்சுக்கலாம், கடிச்சுக்கினும் ஊத்திக்கலாம் என்ற தத்துவம் எப்பொழுதும் எல்லா இடத்திலும் சரிவராது என்பதை கோயிஞ்சாமி உணர்ந்து கொண்டான்.

18 Comments:

At July 29, 2005 1:06 PM, Blogger தகடூர் கோபி(Gopi) said...

இன்னா கோயிஞ்சாமி3,

யாராவது சக்கரத்தை மறுபடி மறுபடி கண்டுபிடிப்பாங்களா? இருக்குற கோடானுகோடி நிரல்கள்ல எதாச்சும் பயன்படுத்திக்க வேண்டியதுதானே

இங்க போய் பாரும்.

http://javascript.internet.com/

ஆனா என்ன.. ஒரு தத்துவம் பத்தி இப்ப நல்லா விளங்கிடுச்சி

 
At July 29, 2005 1:41 PM, Blogger கோயிஞ்சாமி3 said...

்க்க்கோபி, ஆமாம் ஆமாம். ஒரு தத்துவம் கடைச்சுதே, அதான் எனக்கும் சந்தோஷம். கூகுல தேடினா சக்கரமா கொட்டும்தான், ஆனா சில வண்டிகளுக்கு சக்கரத்த மாட்டறதுக்குள்ள, நாமளே புதுசா பண்ணிடலாம்.

அதோட முக்கியமா, கோடிங்-ன ஒடன கூகுல்ல சக்கரத்த தேடி அலையற மாதிரி நெலம வந்துடக்கூடாதுனு ஒரு பயமும் இருக்கு.

 
At July 29, 2005 1:45 PM, Blogger கோயிஞ்சாமி3 said...

ஈஸ்வரா, ஈஸ்வரா!

என்ன அழிச்சாட்டியம் பண்ணிட்டேன்னு இப்படி கோச்சுக்கறபா? :-(

சப்ப-ன்னு ஜாவாஸ்க்ரிப்டயா சொல்ற? தமிழு இம்மாந்தூரம் நெட்-ல வளந்துக்கறதுக்கே ஜாவாஸ்க்ரிப்ட்டுதாம்பா காரணம்மு. இல்ல பாக்காமலேயே நான் சொன்ன ஸ்க்ரிப்ட்ட சப்ப-னு சொல்ட்டேன்னா, ஹி, ஹி, ஹி. ப்ராஜக்ட் மேனேஜர் மாதிரி பேசறயே. ஏதோ பொயப்ப ஓட்டறேன். கண்டுக்காதபா.

Whats the pointன்னா, "ஊத்திக்கினு கடிச்சுக்கறதால" வர ப்ரச்சனைதான். வேற ஒன்னியுமில்ல.

 
At July 29, 2005 3:12 PM, Blogger வால்டர் said...

ஆகா ஜாவா என்பதை வாழ்வா சாவா என்பது வரை கொண்டு வந்த எங்கள் கோயிஞ்சாமி3 அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

 
At July 29, 2005 4:49 PM, Anonymous Anonymous said...

யோவ் மாங்கா கடலமிட்டாய் :(

சொந்த கோட் எழுது வேணான்னு சொல்லலை.. ஆனா சுலபமா எழுதுயா.

ஒரு array ல mon[0] = 31, mon[1] =28 mon[2] = 31... mon[11]=31

இப்படி போட்டுகின்னு,

ஜூலை மாசமா (7 ஆம் மாசம்)

month[7+1] எடுத்தா 31 வர்ற போவுது
date.getMonth() எநத மாசம் சொல்லும்.

வருசத்தை 4 வகுத்து 0 வந்தா 2ம் மாசத்துக்கு 29 தேதி போட்டுக்க.

சரி சரி, நேத்து வேலை சரியா செய்யாதத்துக்கு கேள்வி கேட்பாங்களோன்னு இப்படி ஒரு போஸ்ட் போட்டு தப்பிச்சுட்டே ! நடத்து.. நடத்து

 
At July 29, 2005 4:51 PM, Anonymous Anonymous said...

// month[7+1] எடுத்தா 31 வர்ற போவுது date.getMonth() எநத மாசம் சொல்லும்.


தப்பாயிடுச்சு.. mon[7-1] போட்டுக்க

 
At July 29, 2005 4:57 PM, Anonymous Anonymous said...

உறுப்பினர் சேர்க்கை நிபந்தனைக்குட்பட்டது

is writing a program like this is
a condition for admission -:)

 
At July 29, 2005 7:04 PM, Blogger கோயிஞ்சாமி3 said...

கடலமிட்டாய் பத்தி சொன்னா இங்க ஒரு "பொறம்போக்கு" ஒடனே ஓடி வரும், பாத்து.

ஏதோ என் எண்ட்ரியையும் படிச்சு ம(மி?!)திச்சு ஒரு ப்ரோக்ராம் லாஜிக் சொன்னதுக்கு நன்றி.

எனக்கு அப்படி அர்ரேல ஸ்டோர் பண்ணி போடற லாஜிக்கே தோணலை (இப்ப புரிஞ்சுதா ஏன் என்னை கோயிஞ்சாமின்னு சொல்லிக்கறேன்னு?) மாசம், கிழமை எல்லாம் மட்டும்தான் அர்ரேல இருக்கு.

ஆனால் இது மாதிரி கோட் எழுதினா, கோயிஞ்சாமி க்ளப்ல சேர்ர வாய்ப்பு இருக்கு.

சரி, இப்போ நீங்க சொன்ன மாதிரியும் நான் எழுதின மாதிரியும் ரெண்டும் இங்க போடறேன்:


மாத்தத்தின் இறுதி நாளைக் கண்டறியும் முறை

function GetLastDayOfTheMonth(dtForThisDayMonthYear)
{
var dtTemp=new Date(dtForThisDayMonthYear)
dtTemp.setMonth(dtTemp.getMonth()+1)
dtTemp.setDate(0)
return dtTemp.getDate()
}

var dt = new Date()
dt.setDate(1);
var lngEnd=GetLastDayOfTheMonth(dt.toString())


மாத்தத்தின் இறுதி நாளை அர்ரேயில் சேமித்து வைத்து, பிறகு அறியும் முறை



function GetLastDayOfTheMonth(dtForThisDayMonthYear)
{
dtForThisDayMonthYear=new Date(dtForThisDayMonthYear);

if(dtForThisDayMonthYear.getFullYear()%4==0&&dtForThisDayMonthYear.getMonth()==1)
return 29
else
return arLastDay[dtForThisDayMonthYear.getMonth()]

}

var arLastDay="31,28,31,30,31,30,31,31,30,31,30,31"
arLastDay=arLastDay.split(",")
var dt = new Date()
var lngEnd=GetLastDayOfTheMonth(dt.toString())


அப்பறம், கொஞ்சம் காதைக் கிட்ட கொண்டு வாங்க. அது என்ன கடைசில அப்படி "நேத்து வேலை சரியா செய்யாததுக்கு" கேள்வி? என்னமோ நேத்து மட்டும்தான் நான் வேலை சரியா பண்ணாத மாதிரி. ;-)

கடைசி அனானிமஸ் கமெண்ட், இந்த மாதிரி ப்ரோக்ராம் எழுதினா கோயிஞ்சாமி க்ளப்ல சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கு. சீனியரைத் தொடர்பு கொள்ளவும்.

 
At July 29, 2005 8:48 PM, Anonymous Anonymous said...

கடைசி அனானிமஸ் கமெண்ட், இந்த மாதிரி ப்ரோக்ராம் எழுதினா கோயிஞ்சாமி க்ளப்ல சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கு. சீனியரைத் தொடர்பு கொள்ளவும்

Now I understand writing such programs continuosly is also a
condition to continue in the club :)

 
At July 29, 2005 9:10 PM, Blogger கோயிஞ்சாமி3 said...

Oh well, it is not that necessary to continue the same goinchamism. adhukkaaga admission kadaichcha thenaavettula discontinue panradhum thappu. ;-)

 
At July 30, 2005 7:00 PM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

கடவுள் நம் தலையெழுத்தை ஜாவாஸ்க்ரிப்ட்டில்தான் எழுதி வருகிறார் என்று கேள்விப்பட்டிருக்கேன்.

கடவுளும் ஒரு கோயிஞ்சாமின்னு சொல்ல வரீங்களா இல்லை கடவுளுக்கு ஜாவாஸ்கிரிப்ட் சரியாக தெரியாதுன்னு சொல்றிங்களா :)

 
At July 30, 2005 7:58 PM, Anonymous Anonymous said...

Oh well, it is not that necessary to continue the same goinchamism. adhukkaaga admission kadaichcha thenaavettula discontinue panradhum thappu. ;-)

this is goinchamism -:)

 
At August 15, 2005 8:06 AM, Blogger PKS said...

கோயிஞ்சாமிகளுக்கு கும்பிடரேனுங்க!

இந்தக் கமெண்ட்டின் மீது பல நாட்கள் படுத்துத் தூங்கிய பின் எழுதறேன்னு கற்பூரம் அணைக்கறேனுங்க. எழுதவாணாம்னு பார்த்தேன். சரி, உருப்படியான விஷயங்களைச் சிந்திக்கும் இடத்தில் கொஞ்சம் நாமும் சிந்திப் பார்ப்போம்னு எழுத வந்துட்டேனுங்க. இந்தப் போஸ்டை எழுதிய கோயிஞ்சாமி நம்ம தோஸ்துசாமியான ராஜிசாமியா இருக்கலாம்னு உள்ளுணர்வு வேற குரல் கொடுத்துச்சுங்களா. அவருமேல நமக்குத் தனிப் பாசங்களா. அதான் இவ்ளோ நாள் எழுதலைங்க. (கொங்கு ராசா ஸ்டைலுல நடை இருக்குங்களா? இல்லின்னா சொல்லுங்க, அவரு கிட்ட டியூசன் போயிக்கலாம்.)

இந்தப் போஸ்டைப் படிச்சதும் என் சிற்றறிவுக்குத் தோணினதுங்க:

1. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிற கோடு, வட்டம், ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்த வேண்டாமென்று முடிவு செய்திருந்த கோயிஞ்சாமி, இலவசமாகக் கிடைக்கிற ஜாவா ஸ்கிரிப்டு, எச்டிஎம்எல்-னு இன்னும் பலதையும் பயன்படுத்த வேண்டாம்னு முடிவு செய்யாதது கண்டு சந்தோஷமங்க. கோயிஞ்சாமி புண்ணியத்துல அப்டி ஏதும் கோயிஞ்சாமி ஸ்கிரிப்டு, கோயிஞ்சாமி டேகுனு கிடைச்சா சந்தோசம்தானுங்க.

2. இந்தக் கோயிஞ்சாமி ஜாவால கோடு எழுதலியேனு சந்தோஷமாவும் இருக்குங்க. ஏன்னா, ஜாவுல கோடு எழுதும்போது, ஏற்கனவே எவனோ எழுதி இலவசமாகக் கிடைக்கிற லைப்ரரி எல்லாமும்கூட பயன்படுத்த மாட்டேன்னு சபதம் போட்டிருந்தார்னா, என்ன ஆவறதுங்க.

3. கோயிஞ்சாமி இப்படி ரீ-இன்வெண்டிங் வீல் செய்ஞ்சுட்டு இருந்தார்னா, வாழ்க்கை புல்லா, புரோகிராமராவே இருப்பாரே, எப்போ ப்ராஜக்ட் மானேஜர் ஆவார்னும் எனக்கு வருத்தமா இருக்குதுங்க.

4. இந்தக் கோயிஞ்சாமி இதை எல்லாம் பாஸ் சாமி கோயிஞ்சாமி 2 முன்னாடி எழுதுற அளவுக்குக் கொயந்தையா வேற இருக்காரேனு இருக்குங்க. இருப்பதை எடுத்துப் பயன்படுத்தாம, புதுசா எழுதறேன்னு கிளம்புறவங்களை ப்ரொடக்டிவிடில ஆர்வம் உள்ள பாசுங்களுக்குப் பிடிக்காதுங்களே. இப்படி கோயிஞ்சாமி மூணு முறை இலவசம் வேணாம்னு எழுதி விட்டார்னா, சீட்டுக் கிழிஞ்சிடுமோன்னு வேற பயமா இருக்குங்க.

5.இந்த மாதிரி இலவசம் வேணாம்னு கோயிஞ்சாமி எடுக்கிற சபதங்களை ஆர்வக்கோளாறுல வெளிய எழுதி, தனக்கே வேட்டு வெச்சுக்காத அறிவுச்சாமியா அவரு ஆகணும்னு வேண்டிக்கறேங்க.

அன்புடன் ஜாலியாக, குப்சாமி மகன் சிவசாமி (பி.கே. சிவகுமார்)

 
At August 15, 2005 2:14 PM, Blogger Unknown said...

பிகேஎஸ் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

கோயிஞ்சாமி3, காலத்துக்கும் புரோகிராமராவே ஓட்டிட எண்ணமா? ஜாவாஸ்கிரிப்ட் காலெண்டருக்கு, அதுவும் அதுல மாசக்கடைசி தேதி பார்க்க ஒரு நாள் செலவு பண்ணா அப்புறம் ஊத்திக்கினு கடிக்க முடியாது, ஊத்திகினு போயிடும்.

 
At August 15, 2005 5:15 PM, Anonymous Anonymous said...

goinchami-8A = icarus prakash

 
At August 16, 2005 2:38 PM, Blogger கோயிஞ்சாமி3 said...

அன்புள்ள சிவசாமி,

ஒரே இடத்தில் வசித்தும் இப்பொழுதெல்லாம் ராஜிசாமியை என்னாலேயே அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை.

சர்ரி வுட்டு. எனுக்கும் செந்தமியு வராது. இன்னா சார் சொல்லிகின. எலவசமா குட்தா வோணாம்போமா? ஃபினாயில்லயே சக்கர போட்டுக் குட்ச்ருவோம், அக்காங். எலவசமா கட்ச, வந்து, கடச்ச கோடு எல்லாம் செட் ஆகல. லைபிரி பங்சன் கண்க்கா இர்ந்ருந்தா டாவுலயே டேவா கோடுக்குள்ள சொர்கி சோக்கா மேட்டர முட்ச்ருப்பேனே. அத எட்து, திர்த்தி, நெர்ப்பி முடிக்றதுக்குள்ள புச்சா நாமளே எய்திடலாம்னுதான் அப்டி பண்டேன். ஒர் நாள் வீணானதுதான் எலவச எணைப்புபா. :-(

ஜாவா லைபிரி மாரி இர்ந்தா கபால்னு எட்து சொருவிருவேன்ல! தம்மாத்தூண்டு ஸ்கிரிப்டுல அப்டியே எட்து பயன்பட்த்ர மாரிதான் கட்சுது. நிரல்செண்டுனா சந்தோசமா எட்துப்பேன், நிரல்துண்டு ரொம்ப பேஜாரக்கீது. தேவையான எட்த்ல எட்து பயன்பட்த முடீலயே. ஆனா இப்போ நான் எய்தினது எங்க வேண்ணா பயன்பட்த்ர மாரி வெச்சுக்குறேன். ப்ராஜக்ட் மானேஜரு எல்லாம் ஓவரு. வர்தமா க்கீதுன்னு சொல்லி பீலானதுக்கு ரொம்ப டான்க்ஸ்பா. என்கு அதுக்கெல்லாம் பொர்தமே இல்ல.

நெட்ல கீறத எட்து ஊஸ் பண்றது பொர்டிக்டிவிட்டிதான், ஆனா ரீஊசபிலிட்டிக்கு ஒத்து வரும்போல தெர்ல நான் பாத்த கோடு எல்லாம். அதான் நானே அடிக்கடி பயன்பட்த அப்டி எய்தி வெச்சுக்குறேன். இப்போ வேற ப்ராஜக்ட்னாலும் ஈசியா எட்து ஊசு பண்ணிக்களாம்ல?

மத்தபடி சபதம் எல்லாம் ஒன்னியும் இல்ல. இம்மாந்த்தூரம் வந்து எனக்கோசரம் பெர்ய டைமு செலவழிச்சு கமெண்ட் குட்க எய்துனதுக்கு ரொம்ப டாங்க்சுபா.

 
At August 16, 2005 2:40 PM, Blogger கோயிஞ்சாமி3 said...

kvr,
ஒரு நாள் செல்வழிஞ்சது ஆக்சிடெண்டு. :-( யார் கண்டா அப்படி ஒரு லாஜிக் தப்பு பண்ணுவேன்னு. ஏதோ இனிமேல் கவனமா இருக்கணும்னு புரிஞ்சது, அவ்வளவுதான்.

ம்ம், ப்ரோகிராமராவாவது காலம் ஓடினா சரி. :-)

 
At August 16, 2005 2:42 PM, Blogger கோயிஞ்சாமி3 said...

மத்தபடி சபதம் எல்லாம் ஒன்னியும் இல்ல. இம்மாந்த்தூரம் வந்து எனக்கோசரம் பெர்ய டைமு செலவழிச்சு கமெண்ட் குட்க எய்துனதுக்கு ரொம்ப டாங்க்சுபா.

மத்தபடி சபதம் எல்லாம் ஒன்னியும் இல்ல. இம்மாந்த்தூரம் வந்து எனக்கோசரம் நெர்ய டைமு செலவழிச்சு எய்தி கமெண்ட் குட்ததுக்கு ரொம்ப டாங்க்சுபா.

எப்பப்பாத்தாலும் ஒரே மிஷ்டேக்கா பூட்சி. ஃபெல்லிங்க் மிஷ்டேக் சொன்னேன்.

 

Post a Comment

<< Home