Tuesday, July 12, 2005

கோயிஞ்சாமியும் அரசியலும்

கோயிஞ்சாமி மிகவும் பெருமிதமடைந்தும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். தி ஹிந்து நாளிதழைப் புரட்டிப்பார்க்கும் போது அப்படியொரு செய்தி அவனது கண்ணில் பட்டது. தலைப்புச் செய்தியாக வந்த அந்த வரியை எப்படியோ எழுத்துக்கூட்டிப் படித்து முடித்ததும் கொயிஞ்சாமிக்குத் தலைகால் புரியவில்லை.

வந்திருந்த செய்தி இதுதான்:

RSS delivers stern message to BJP

கோயிஞ்சாமி பொதுவாகவே விஷயஞானம் அதிகம் உள்ளவனாதலால் பி.ஜே.பி என்பது ஒரு இந்திய அரசியல் கட்சி என்பதை மிகவும் சுலபமாகக் கண்டுபிடித்து விட்டான். இந்த அரசியல் கட்சி வலைப்பதிவுகளைப் படிப்பது வருவதும் அந்த வரியில் இருந்து கோயிஞ்சாமிக்குப் புரிந்தது.

தலைப்புச் செய்தியைப் படித்ததுமே புரிந்து விட்டது, ஏதோ ஒரு வலைப்பதிவாளர் ஒரு கடினமான கோரிக்கையை முன்வைத்து வலைப்பதிவு எழுதி இருக்கிறார் என்று. அதாவது நாட்டு மக்கள் இடும் வலைப்பதிவுகளை எல்லாம் ஒரு இந்தியக் கட்சி படித்துவருகிறது. அப்படிப் படிக்க ஏதோ ஒரு ஆர்.எஸ்.எஸ் ரீடரைப் பயன்படுத்துகிறது. ஒரு இந்தியக்குடிமகனின் வலைப்பதிவுக்கான RSS ஒரு கடினமான வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

என்ன ஒரு கட்சி பி.ஜே.பி! இப்படி கட்சிக்குள் தகவல்தொடர்புத் துறை ஒன்று அமைத்து நாட்டுமக்களின் வலைப்பதிவுகளைக் கூட படித்து வருகிறதே. ஆஹா, இந்தியா என்றால் இந்தியாதான். எந்த நாட்டில் உள்ளது இது போன்ற ஒரு மக்களை மதிக்கும் பண்பாடு.

ஒரு வேளை எதிர்க்கட்சியின் வலைப்பதிவில் வந்த RSS Feedஆக இருக்குமோ? சரி, எப்படியோ. நாட்டிலுள்ள கட்சிகளெல்லாம் கொள்கை பரப்ப வலைத்தளம் மட்டும் இல்லாமல் பிறர் கருத்துக்களை மதிக்க வலைப்புக்களையும் படித்து வருகின்றன. அதுமட்டும் மகிழ்ச்சி.

காங்கிரசின் ஆட்டப் பிரச்சனை, பி.ஜே.பியின் ஆர்.எஸ்.எஸ். பிரச்சனை, எல்லாம் நாட்டிற்கும் பிரச்சனையாக இருக்கிறதே என்று கவலைப்படும் அதே வேளையில், Atom மற்றும் RSS தொழில்நுட்பங்களுக்கு மனதார நன்றியும் சொல்லிக்கொண்டான் கோயிஞ்சாமி.

5 Comments:

At July 12, 2005 2:00 PM, Blogger Unknown said...

:-)) கலக்கல்....

 
At July 12, 2005 3:02 PM, Blogger Pavals said...

கோயிஞ்ஞ்ச்ச்சாமிமிமீய்ய்.. இதெல்லாம் ரொம்ப டூ மச்... ஆமாம்..!!

 
At July 12, 2005 3:03 PM, Blogger ஜெகதீஸ்வரன் said...

கோயிஞ்சாமி அண்ணே, கலக்கிப்புட்டீங்க !! எப்டீங்கண்ணா உங்களால மட்டும் முடியுது ??

:-))

 
At July 12, 2005 4:51 PM, Blogger தகடூர் கோபி(Gopi) said...

கோயிஞ்சாமி, பி.ஜே.பி யோட RSSக்கும் காங்கிரஸோட Atomக்கும் Aggregatorஎயுதுறது யாருபா?

 
At July 13, 2005 12:08 AM, Blogger கோயிஞ்சாமி3 said...

பின்னூட்டமிட்ட கோயிஞ்சாமிக்கும் ராஜாதிராஜாக்களுக்கும் 'இறகு'நாதருக்கும் நன்றி.

கோபி, எல்லா அரசியல்வாதிகளுக்குமே அக்ரகேட்டர் எழுதுவது தமிழ்மனம்தானாம். தமிழர்களின் மனம்.

 

Post a Comment

<< Home